பயன்பாட்டு விதிமுறைகள் · Terms of Use
பதிப்பு 1 · 6 நவம்பர் 2026 · Version 1 · 6 November 2026
அமுது (amudhu.oliyonresearch.com) சேவையை ஒளியோன் ஆய்வகம் (Oliyon Research), சென்னை நடத்துகிறது. அமுதைப் பயன்படுத்துவதன் மூலம் கீழ்க்கண்ட விதிமுறைகளை — குறிப்பாக உடல்நலப் பொறுப்புத் துறப்பை — ஏற்கிறீர்கள். ஏற்கவில்லை என்றால் அமுதைப் பயன்படுத்த வேண்டாம்.
Amudhu (amudhu.oliyonresearch.com) is run by Oliyon Research, Chennai. By using Amudhu you accept these terms, above all the health disclaimer. If you do not accept them, please do not use Amudhu.
உடல்நலப் பொறுப்புத் துறப்பு — முதலில் படியுங்கள் · Health disclaimer: read this first
அமுது மரபு வழிப் பரிந்துரைகளையும் ஓர் அணுகுமுறையையும் மட்டுமே தருகிறது. இது மருத்துவ ஆலோசனையோ, நோய் கண்டறிதலோ, சிகிச்சையோ, மருந்தோ அல்ல. எந்த உணவும் எந்த நோயையும் தடுக்கும், குணமாக்கும், மீட்கும் என்று அமுது சொல்வதில்லை; அப்படி எந்த உறுதிமொழியும் தருவதில்லை. “மரபுப் பயன்” என்று காட்டுவது சித்த மரபு அல்லது பழைய நூல்கள் சொல்வது மட்டுமே.
Amudhu gives traditional suggestions and an approach only. It is not medical advice, diagnosis, treatment or medicine. Amudhu never says that a food prevents, treats, cures or reverses any illness, and makes no such promise. What it shows as a “traditional use” is only what Siddha tradition or the old texts say.
உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால், மருந்து எடுத்தால், கருவுற்றிருந்தால் அல்லது பாலூட்டினால், 18 வயதுக்குக் கீழ் அல்லது 70 வயதுக்கு மேல் இருந்தால் — உணவு முறையை மாற்றுவதற்கு முன் உங்கள் மருத்துவரைக் கேளுங்கள். மருத்துவர் தந்த மருந்தை ஒருபோதும் நிறுத்தவோ குறைக்கவோ வேண்டாம். உடல்நலம் குறைந்தால், புதிய அறிகுறி தோன்றினால் உடனே நிறுத்தி மருத்துவரை அணுகுங்கள். அவசர நிலையில் 108-ஐ அழையுங்கள்.
If you have any illness, take medicines, are pregnant or breastfeeding, or are under 18 or over 70, ask your doctor before you change how you eat. Never stop or reduce a medicine your doctor gave you. If you feel unwell or notice a new symptom, stop and see a doctor. In an emergency, call 108.
அமுதின் உள்ளடக்கத்தை ஒரு சித்த மருத்துவர் (MD Siddha) சரிபார்த்து வருகிறார்; சரிபார்த்த அட்டைகளில் அதற்கான குறி இருக்கும். சரிபார்த்தாலும் அது உங்களுக்கான தனிப்பட்ட மருத்துவ ஆலோசனை ஆகாது.
Amudhu’s content is being checked by a Siddha physician (MD Siddha); checked cards carry a mark. Even when checked, it is not personal medical advice for you.
யார் பின்பற்றக் கூடாது · Who must not follow this
கீழ்க்கண்டவர்கள் உங்கள் மருத்துவர் எழுத்தில் சரி என்று சொல்லாமல் அமுதின் உணவுத் திட்டங்களையும், விரதம், வேளைக் குறைப்பு, மூலிகைப் பானம், 48 நாள் பயிற்சி போன்றவற்றையும் பின்பற்றக் கூடாது. அமுதின் பாதுகாப்பு வடிகட்டி இவற்றில் பலவற்றைத் தானே மறைக்கும்; ஆனால் வடிகட்டி மருத்துவருக்கு மாற்று அல்ல.
The people below must not follow Amudhu’s food plans, or fasting, cutting meals, herbal drinks or 48-day courses, without their doctor’s written yes. Amudhu’s safety filter hides many of these for you, but the filter is no substitute for a doctor.
- கருவுற்றவர்கள், பாலூட்டும் தாய்மார்
Pregnant or breastfeeding women - 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் (பெற்றோர் வழியாக, பொது உணவுக் குறிப்புகள் மட்டும்)
Anyone under 18 (general food notes only, through a parent) - சர்க்கரை நோய்க்கு இன்சுலின் அல்லது மாத்திரை எடுப்பவர்கள்
People on insulin or tablets for diabetes - சிறுநீரக நோய், டயாலிசிஸ், சிறுநீரகக் கல் உள்ளவர்கள்
People with kidney disease, on dialysis, or with kidney stones - இரத்தம் உறையாமல் தடுக்கும் மருந்து எடுப்பவர்கள்
People on blood thinners - இதய / சிறுநீரக நோயால் நீர் அளவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்
People told by a doctor to limit fluids (heart or kidney) - உணவுப் பழக்கக் கோளாறு இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள்
Anyone with an eating disorder, now or in the past - எடை மிகக் குறைந்தவர்கள், உடல் மிகவும் தளர்ந்தவர்கள்
The very underweight or frail - இப்போது நோயுற்றவர்கள், சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்தவர்கள்
Anyone ill now or recovering from surgery - எந்த உணவிலாவது ஒவ்வாமை உள்ளவர்கள் — அந்த உணவைத் தவிருங்கள்
Anyone allergic to a food: leave that food out
உள்ளடக்கம் பற்றி — எங்கள் நோக்கம் · About the content: our purpose
அமுது சொல்லும் உணவு நெறிகள் வெளியிடப்பட்ட மூலங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை: தேரையர், திருமூலர் போன்ற சித்தர்களின் நூல்கள், திருக்குறள், இராமலிங்க வள்ளலாரின் நித்திய கரும விதி, இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் (BIS) சித்த மருத்துவத் தரச் சொற்கள், சித்த ஆய்வு நிறுவனங்களின் வெளியீடுகள், ஆய்வுக் கட்டுரைகள். ஒவ்வொரு அட்டையும் தன் ஆதாரத்தைச் சுட்டுகிறது; எல்லா ஆதாரங்களும் “ஆதாரங்கள்” பக்கத்தில் உள்ளன. “அமுதின் பரிந்துரை” என்று குறித்தவை எங்கள் தொகுப்பு.
The food ways Amudhu describes are gathered from published sources: the texts of Siddhars such as Theraiyar and Thirumoolar, the Thirukkural, Ramalinga Vallalar’s Nithya Karuma Vidhi, the Bureau of Indian Standards’ Siddha terminology, the publications of Siddha research institutes, and research papers. Every card names its source; all of them are on the “Sources” page. Those marked “Amudhu’s proposal” are our own compilation.
ஒவ்வொரு நெறிக்கும் இரண்டு வரிகள்: நூல் சொல்வது, இன்றைய அறிவியல் சொல்வது. மூலங்கள் ஒன்றோடொன்று மாறுபடும் இடங்களை வெளிப்படையாகக் குறித்திருக்கிறோம். அமுது சைவ உணவை மட்டுமே பரிந்துரைக்கிறது; பாலைச் சேர்ப்பதில்லை (நெய், மோர் விருப்பத்துக்கு). எங்கேனும் தவறோ குறையோ இருந்தால் கருத்துப் பெட்டியில் சொல்லுங்கள்; ஆதாரங்களோடு சரிபார்த்துத் திருத்துவோம்.
Every rule carries two lines: what the text says, and what evidence says today. Where sources disagree we say so openly. Amudhu suggests vegetarian food only and leaves milk out (ghee and buttermilk are optional). If anything is wrong or missing, tell us in the suggestion box; we will check it against the sources and correct it.
1. சேவை · The service
அமுது உங்கள் ஊரின் தமிழ் மாதத்தையும் சூரிய உதயத்தையும் கொண்டு பருவத்தையும் நாளின் பொழுதுகளையும் கணக்கிட்டு, சித்தர் வழியிலான உணவுப் பரிந்துரைகளைக் காட்டுகிறது: இன்றைய உணவு, வார அட்டவணை, கீரைகள், உணவுப் பொருட்கள், சமையல் முறைகள், 144 நாள் மாற்றப் பாதை, மின்னஞ்சல் நினைவூட்டல். கணக்குகள் உங்கள் சாதனத்திலேயே நடக்கின்றன. திருவிழா, விரத நாட்கள் எங்கள் திங்கள் கருவியிலிருந்து வருகின்றன. அமுது இலவசம்.
Amudhu works out the season and the parts of the day from your town’s Tamil month and sunrise, and shows food suggestions the Siddha way: today’s plate, a weekly chart, the greens, the food library, cooking methods, a 144-day change-over path and e-mail reminders. The working-out happens on your device. Festival and fast days come from our Thingal tool. Amudhu is free.
2. உங்கள் பொறுப்பு, சமையல் பாதுகாப்பு · Your responsibility, and kitchen safety
எதைப் பின்பற்றுவது என்பது உங்கள் சொந்த முடிவு. உங்கள் ஒவ்வாமைகளை நீங்களே அறிந்து தவிருங்கள். சமையலில் கவனம்: மண்பானை மெருகில் காரீயம் (lead) இருக்கக் கூடாது; ஈயச்சொம்பு வெள்ளீயமாக இருக்க வேண்டும், காலியாகச் சூடாக்கக் கூடாது; மணல் வறுவலில் மணல் மிகச் சூடாக இருக்கும்; பிரண்டையும் கருணைக்கிழங்கும் நன்றாக வேக வேண்டும்; கசக்கும் சுரைக்காயை உண்ணக் கூடாது; ஒரு வயதுக்குக் குறைந்த குழந்தைக்குத் தேன் கொடுக்கக் கூடாது. ஒவ்வொரு அட்டையிலும் உள்ள எச்சரிக்கைகளைப் படியுங்கள்.
What you follow is your own choice. Know your allergies and leave those foods out. Take care in the kitchen: a clay pot’s glaze must hold no lead; an eeya chombu must be tin and must never be heated empty; the sand in sand roasting gets very hot; pirandai and elephant yam must be cooked through; never eat a bottle gourd that tastes bitter; never give honey to a baby under one. Read the cautions on every card.
3. துல்லியம் · Accuracy
மரபு நூல்களும் அவற்றின் உரைகளும் பல இடங்களில் மாறுபடுகின்றன; சித்த மருத்துவர்களும் வேறுவேறாகச் சொல்லலாம். பருவமும் சூரிய உதயமும் கணக்கீடுகள்; உள்ளூர் நாட்காட்டியோடு ஒரு நாள் மாறலாம். உள்ளடக்கத்தைத் தொடர்ந்து சரிபார்த்துத் திருத்துகிறோம்; ஆனால் முழுமையோ பிழையின்மையோ உறுதியளிக்க இயலாது.
The traditional texts and their commentaries differ in many places, and Siddha physicians may say different things. The season and sunrise are calculations and can differ by a day from a local calendar. We keep checking and correcting the content, but cannot promise it is complete or free of error.
4. உங்கள் தரவு · Your data
உங்கள் உடல்நலப் பதில்கள் — பாதுகாப்பு வடிகட்டி, ஒவ்வாமை / விலக்கிய உணவுகள், உடல் வாகு சுய மதிப்பீடு — உங்கள் சாதனத்தை விட்டு வெளியே போவதில்லை. உள்நுழைந்தால் உங்கள் ஊர், உணவுத் திட்டத் தேர்வுகள், பாதை, சேமித்த உணவுகள் உங்கள் கணக்கிலும் வைக்கப்படும். விவரம்: தனியுரிமை அறிவிப்பு.
Your health answers (the safety filter, allergies and foods you leave out, the body-type self-check) never leave your device. Signed in, your town, plan choices, path and saved dishes are also kept in your account. Details: Privacy Notice.
5. திருத்தங்களும் கருத்துப் பெட்டியும் · Suggestions and the suggestion box
நீங்கள் அனுப்பும் திருத்தங்களையும் ஆதாரங்களையும், கருத்துப் பெட்டியில் எழுதும் கருத்துகளையும் ஒளியோன் ஆய்வகக் குழுவும் அமுதைச் சரிபார்க்கும் சித்த மருத்துவரும் படிப்பார்கள்; அவற்றைக் கொண்டு அமுதை மேம்படுத்தலாம். அவற்றில் உங்கள் உடல்நலத் தகவல்களை எழுத வேண்டாம்.
Corrections and sources you send, and what you write in the suggestion box, are read by the Oliyon Research team and the Siddha physician who reviews Amudhu, and may be used to improve Amudhu. Please do not write your own health details in them.
6. கணக்கு · Accounts
கணக்கு தொடங்க 18 வயது நிறைந்திருக்க வேண்டும். உங்கள் மின்னஞ்சலுக்கும் உள்நுழைவுக்கும் நீங்களே பொறுப்பு. இவ்விதிகளை மீறும் கணக்குகளை இடைநிறுத்தவோ நீக்கவோ செய்யலாம். எப்போது வேண்டுமானாலும் கணக்குப் பக்கத்தில் உங்கள் கணக்கை நீக்கலாம்.
You must be 18 or older to create an account. You are responsible for your e-mail and your sign-in. Accounts that break these terms may be paused or removed. You can delete your account at any time on the account page.
7. ஏற்கத்தகாத பயன்பாடு · Acceptable use
அமுதைத் தாக்கவோ, அதிக சுமை ஏற்றவோ, தானியங்கிக் கருவிகளால் தவறாகப் பயன்படுத்தவோ, அதன் உள்ளடக்கத்தை “நோய் தீர்க்கும் உணவு” என்று விளம்பரப்படுத்தவோ, மென்பொருளையோ வடிவமைப்பையோ அனுமதியின்றி நகலெடுத்து விற்கவோ கூடாது.
Do not attack Amudhu, overload it or misuse it with automated tools; do not advertise its content as “food that cures disease”; and do not copy and sell its software or design without permission.
8. உரிமைகள் · Ownership
அமுதின் மென்பொருள், வடிவமைப்பு, சின்னம், விளக்க உரைகள் ஒளியோன் ஆய்வகத்துக்கு உரியவை. மேற்கோள் காட்டிய பழந்தமிழ் நூல் வரிகள் பொதுவுடைமை. இணைப்புக் கொடுத்த ஆதாரங்கள் அவற்றின் உரிமையாளர்களுக்கு உரியவை. எழுத்துருக்கள் SIL Open Font License-இன் கீழ்.
Amudhu’s software, design, logo and explanatory text belong to Oliyon Research. The classical Tamil lines quoted are in the public domain. Linked sources belong to their owners. The fonts are under the SIL Open Font License.
9. உத்தரவாதம் இல்லை, பொறுப்பு வரம்பு · No warranty, limitation of liability
அமுது “உள்ளபடியே” வழங்கப்படுகிறது. சட்டம் அனுமதிக்கும் அளவில், அமுதின் பரிந்துரைகளைப் பின்பற்றுவதால், அமுதைப் பயன்படுத்துவதால் அல்லது பயன்படுத்த இயலாததால் ஏற்படும் உடல்நலப் பாதிப்பு, இழப்பு அல்லது சேதத்துக்கு ஒளியோன் ஆய்வகம் பொறுப்பல்ல.
Amudhu is provided “as is”. To the extent the law allows, Oliyon Research is not liable for any harm to health, loss or damage arising from following Amudhu’s suggestions, or from using or being unable to use Amudhu.
10. சட்டமும் மாற்றங்களும் · Law and changes
இவ்விதிமுறைகள் இந்தியச் சட்டத்துக்கு உட்பட்டவை; சென்னை நீதிமன்றங்களுக்கே அதிகார வரம்பு. விதிமுறைகளை மாற்றினால் இப்பக்கத்தில் புதிய பதிப்பை வெளியிட்டு, தேவைப்படும் இடத்தில் உங்கள் ஒப்புதலை மீண்டும் கேட்போம்.
These terms are governed by the laws of India; the courts of Chennai have jurisdiction. If we change them, we will publish the new version on this page and ask for your agreement again where needed.